"2024 பட்ஜெட் புதிய வரலாற்றுச் சாதனை படைக்கும்" - நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை
காஷ்மீர் தேர்தல் வரலாற்றுச் சாதனை - ஜனாதிபதி
"பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும்"
"தேர்தல் ஆணையத்திற்கு ஜனாதிபதி பாராட்டு"
"மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி"
"உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 15%"
"வளர்ந்த இந்தியாவின் அத்தியாயம் புதிய நாடாளுமன்றத்தில் எழுதப்படும்"
"2024 பட்ஜெட் புதிய வரலாற்றுச் சாதனை படைக்கும்"
"விவசாயிகளுக்கு ரூ.3.20 லட்சம் கோடி உதவித் தொகை"
"இனி வரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம்"
"உலகளவில் சிறுதானிய உற்பத்தியின் கேந்திரம் இந்தியா"
"கிராமப்பகுதிகளில் 3.80 லட்சம் கி.மீ நீளத்திற்கு சாலைகள்"
"பெண்களை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்கள்"
"3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டம்"
"வடக்கிழக்கு மாநிலங்கள் பற்றி ஜனாதிபதி உரை"
மணிப்பூர், மணிப்பூர் என எதிர்க்கட்சிகள் முழக்கம்
"சோலார் பேனல் திட்டம் EB பில்லை குறைக்கும்"
"நாட்டின் வளர்ச்சியில் பழங்குடியினர் பங்களிப்பு அதிகரிப்பு"
"முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில்"
"தமிழ்நாடு & உ.பி.யில் தளவாட உற்பத்தி தொழில் வழித்தடங்கள்"
"2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயார்"
"ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த ஏற்பாடு"
"புதிய கிரிமினல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்"
"தமிழ் வளர்ச்சிக்காக உ.பி. & குஜராத்தில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி"
"வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை"
"நீட் தேர்வு முறைகேடு குறித்து சிறப்பு குழு விசாரணை"
"தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை குலைக்க கூடாது"
"ஜனநாயகத்தின் நம்பிக்கையை தகர்க்க வேண்டாம்"
"எமர்ஜென்சி மூலம் அரசியலமைப்பின் மீது நேரடி தாக்குதல்"
18ஆவது மக்களவை அமைந்துள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை
மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கும், மீண்டும் தெரிவான சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் எனது வாழ்த்துகள் - ஜனாதிபதி
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் என்பது உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா ஆகும் - ஜனாதிபதி
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை வெற்றிக்கரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி - ஜனாதிபதி
காஷ்மீரில் வெற்றிகரமாக மக்களவை தேர்தலை நடத்தி முடித்ததற்கு, ஜனாதிபதி பாராட்டு - பிரதமர் உள்ளிட்டோர் மேசையை தட்டி வரவேற்பு
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், எதிர்மறை சக்திகளுக்கு, ஜம்மு-காஷ்மீர் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்
3ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றிருப்பது, மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது
இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது; அதில் முக்கிய திட்டங்கள் இடம்பெறும் என நம்புகிறேன் - ஜனாதிபதி
மக்களவை தேர்தலில் நல்ல முடிவு ஜம்மு காஷ்மீரிலிருந்தும் வந்துள்ளது - ஜனாதிபதி
காஷ்மீரில் கடந்த 40 ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம், வன்முறைக்கு இடையே தேர்தல் நடந்து முடிந்துள்ளது - ஜனாதிபதி
ஜம்மு-காஷ்மீரில் இந்த முறை தேர்தல் அமைதியாக நடந்துள்ளது. காஷ்மீரில் இதுவரைக்கும் இல்லாதளவுக்கு வாக்குப்பதிவு - ஜனாதிபதி
வளர்ச்சி அடைந்த இந்தியாவின் புதிய அத்தியாயம் இந்த அவையில் எழுதப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது - குடியரசு தலைவர்
விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறுவதோடு, வரலாற்றுச் சாதனை படைக்கும்
வளர்ச்சி அடைந்த இந்தியாவின் புதிய அத்தியாயம் இந்த அவையால் எழுதப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது - குடியரசு தலைவர்
பொருளாதாரத்தில் இந்தியா மிகவேகமாக வளர்ந்து வருகிறது - குடியரசு தலைவர்
எமது அரசு, உற்பத்தித்துறை, சேவைத்துறை, வேளாண்துறைகளுக்கு சமமான முக்கியத்துவம் வழங்குகிறது
விரைவில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அது இந்திய அரசை சரியான பாதையில் இட்டுச்செல்லும் ஆவணமாக இருக்கும்
ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி என்பதே எனது அரசின் நோக்கம். இதனால் உலகளவில் முதலீட்டை ஈர்க்க முடியும்
வடகிழக்கு மாநிலங்கள் குறித்து ஜனாதிபதி உரையாற்றும் போது, மணிப்பூர், மணிப்பூர் என எதிர்க்கட்சிகள் முழக்கம்
மின்சக்தி, பசுமை மின் திட்டம் என அனைத்து திட்டங்களிலும் இந்தியா வளர்ந்து வருகிறது
அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு பெருகிவருகிறது. சுயவேலைவாய்ப்பிலும் எனது அரசு நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது
விவசாயம், மீன்வளர்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்படும்
இயற்கை விவசாயத்திற்கான அனைத்து உதவிகளையும் எனது அரசு செய்துவருகிறது
உலகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்கும் நாடாக இந்தியா முன்னேறி வருகிறது
கிஷான் சம்மன் நிதியாக விவசாயிகளுக்கு இதுவரை 3,20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது
இயற்கை விவசாயத்திற்கான அனைத்து உதவிகளையும் எனது அரசு செய்துவருகிறது
உலகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்கும் நாடாக இந்தியா முன்னேறி வருகிறது
உலகத்திலேயே மிகப்பெரிய உள்நாட்டு விமான சேவை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது
மும்பையில் அமைக்கப்படுவதைப் போல், நாட்டின் மற்ற பகுதிகளிலும் புல்லட் ரயில் திட்டம் கொண்டுவர எனது அரசு முயற்சி
தென் இந்தியா, மேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியா ஆகியவற்றை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை
ட்ரோன்கள் மூலம் விவசாயம் செய்யும் பயிற்சிகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன
நமோ ட்ரோன் திட்டத்தின் கீழ் ட்ரோன் பைலட் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது
30 ஆயிரம் பெண்களுக்கு விவசாய சக்தி என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் பெண்களின் சேமிப்பை உயர்த்துவதற்கான பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன
மின் கட்டணத்தை பூஜ்யம் ஆக்குவதற்கான பிரதமரின் சூர்ய மின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 கோடி பேர் பதிவு
தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசத்தில் ஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழில் வழித்தடங்கள் அமைகின்றன
எனது அரசு 55 கோடி பயனாளர்களுக்கு ஆயுஷ்மன் பாரத் திட்டம். இதில், 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை
போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வு முறைகேடு குறித்து சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கும் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது - ஜனாதிபதி
எமர்ஜென்சி மூலம் இந்திய அரசியலமைப்பின் மீது மிகப்பெரிய அளவில் நேரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி
Comments